குளங்களில் வளரும் ஆகாயத்தாமரைகள்
குளங்களில் வளரும் ஆகாயத்தாமரைகள்
கோவை
குளங்களில் மீண்டும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளது. இதனால் படகுசவாரி விடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
அழகுபடுத்தப்படும் குளங்கள்
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன், குளம், வாலாங்குளம் உள்ளிட்ட குளங் கள் உள்ளன. அவை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப் பட்டு வருகிறது. இதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
குளக்கரைகள் மேம்படுத்தப்பட்டு நடைபாதை, பூங்கா, சைக்கிள் செல்ல தனிப்பாதை, சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், காட்சி கோபுரங்கள், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
முன்னதாக உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களில் ஆக்கிரமித்து வளர்ந்திருந்த ஆகாயத் தாமரைகள் நவீன எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் உக்கடம், வாலாங்குளம், சிங்காநல்லூர், முத்தண்ணன்குளம் உள்ளிட்ட குளங்களில் மீண்டும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து வளர்ந்துள்ளது.
படகு சவாரி
கோவையில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு சுற்றுலா தளம் போல் காட்சி அளிக்கிறது. அங்கு தினமும் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிகின்றனர்.
ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளு டன் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படு கின்றனர். மேலும் கொரோனா தொற்றால் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உக்கடம் பெரியகுளத்தில் மீண்டும் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இதனால் கொரோனா தொற்று அச்சம் முடிந்தாலும் படகு சவாரி விடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நிரந்தர தீர்வு
எனவே குளங்களில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் மீண்டும் ஆகாயத்தாமரை வளராமல் இருக்கும் வகையில் நிரந்தர தீர்வு ஏற்ப டுத்த வேண்டும்.
அப்போது தான் குளங்களை அழகுபடுத்துவதும், அதற்கு அதிக நிதி செலவிடப்படுவதும் பயன் அளிக்க கூடியதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story