200 ஆண்டுகள் பழமையான கல்லறைகள்
திண்டுக்கல்லில் புதர் மண்டி கிடந்த 200 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டுக்கு வந்தவர் பிரான்சிஸ் ஒயிட்எல்லீஸ். இவரது கல்லறை, திண்டுக்கல்லில் இருப்பதாக கூறப்பட்டது. இவர், தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர் என்று கூறப்படுகிறது.
இதனால் திண்டுக்கல்லில் பழமையான கல்லறைகளை கண்டறியும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று மலைக்கோட்டை அடிவாரம் காமராஜர்நகரில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது அங்கு பழமையான கல்லறைகள் இருந்தன. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் முட்புதர்கள் மண்டி கிடந்தன. இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டன.
அதன்மூலம் சுமார் 200 ஆண்டுகள் பழமையான 40-க்கும் மேற்பட்ட கல்லறைகள் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது. அதில் ஆங்கிலேய அதிகாரிகள், கிறிஸ்தவ மதபோதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கல்லறைகள் இருந்தன.
ஆனால் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் என்பவரின் கல்லறை அங்கு இல்லை. இதனால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரம் 200 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டத்தை சீரமைத்த நிம்மதியுடன் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story