3 நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
3 நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டைஒன்றியத்தில்கொரோனா 2 -வது அலையில் பரவலைகட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இதன்ஒரு பகுதியாக கிராமம், கிராமமாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களிடம் நேரடியாகசென்று நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் யும், ஆங்காங்கே முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணியும்மேற்கொண்டுவருகின்றனர்.
இதன் எதிரொலியாக கொரோனா அரக்கன் கட்டுக்குள் வந்துள்ளான். இந்நிலையில், நேற்று சுல்தான்பேட்டையில் உள்ள நூற்பாலை ஒன்றில் 93தொழிலாளர்கள், வா.சந்திராபுரம்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 7 பேர்என மொத்தம் 100பேரிடம் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர்.
பெறப்பட்ட கொரோனா சளிமாதிரிகள் பொள்ளாச்சிஅரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்குஅனுப்பபட்டன. கொரோனா பரிசோதனையில், அரசுடாக்டர்பவித்ரா தலைமையில் தெய்வநாயகி, உதய்உள்பட பலர் பங்கேற்றனர். பரிசோதனை களுக்கான ஏற்பாடுகளை சுகாதாரஆய்வாளர் ரவிச்சந்திரன் செய்து இருந்தார்.
கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் வா.சந்திராபுரம், வதம்பச்சேரி ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசிபோடும் பணி கடந்த 3நாட்களாக நடக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இதன் காரணமாக பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
Related Tags :
Next Story