வால்பாறையில் 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு


வால்பாறையில் 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு
x
வால்பாறையில் 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு
தினத்தந்தி 20 July 2021 10:33 PM IST (Updated: 20 July 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு

வால்பாறை

வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த தனியார் எஸ்டேட் நிர்வாகம் கடந்த 50 ஆண்டுகளாக அவர்களின் தேயிலை தோட்ட பகுதிக்கு அருகில் இருந்த புதிதாக நில அளவை செய்யப்பட்ட 10 ஏக்கர்அரசின் புறம்போக்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து தேயிலை தோட்டங்கள் அமைத்து குத்தகை தொகை செலுத்தி பயன்படுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த 10 ஏக்கர் நிலத்திற்கான குத்தகை தொகையை வருவாய்த்துறைக்கு செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது. 

குத்தகை பாக்கியை செலுத்துமாறு தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்கு வருவாய்த்துறை சார்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் எஸ்டேட் நிர்வாகம் குத்தகை தொகை செலுத்தாமல் காலங்கடத்தி வந்துள்ளது.


இதனை தொடர்ந்து வால்பாறை தாசில்தார் ராஜா இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்து அவரின் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட எஸ்டேட் பகுதியில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு எஸ்டேட் நிர்வாகத்தின் குத்தகையையும் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தார்.

இந்த 10 ஏக்கர் புறம்போக்கு நிலம் யானை வழித்தடமாக இருந்து வருவதால் வரும் நாட்களில் இந்த இடம் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story