கல்வி தொலைக்காட்சி மூலம் படிக்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும்


கல்வி தொலைக்காட்சி மூலம் படிக்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 20 July 2021 10:52 PM IST (Updated: 20 July 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் படிக்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தினார்.

ஊட்டி

பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் படிக்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தினார். 

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வட்டார கல்வி அலுவலர் கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், பயிற்றுனர்களுக்கு ஆய்வு கூட்டம் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

குன்னூர் கல்வி மாவட்ட அதிகாரி சுவாமி முத்தழகன், கூடலூர் கல்வி மாவட்ட அதிகாரி பழனிசாமி, உதவி திட்ட அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

நீலகிரியில் 2 கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டும். இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சிப்பதுடன், அதை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 

ஆசிரியர்கள் ஆய்வு 

பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

பள்ளிகளில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தற்போது பள்ளிக்கு வர அனுமதி இல்லாததால் மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே கல்வி தொலைக்காட்சி மூலம் படிக்கிறார்களா என்று ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

முடிவில் குன்னூர் வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) பிரபாகரன் நன்றி கூறினார்.


Next Story