கோட்டாட்சியர் அலுவலகம் முன் சமையல் செய்து பொதுமக்கள் நூதன போராட்டம்
குடியிருப்பு பகுதிக்கு பாதை கேட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி, ஜூலை.21-
குடியிருப்பு பகுதிக்கு பாதை கேட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதை ஆக்கிரமிப்பு
மணமேல்குடி தாலுகா காடை இடையாத்தூர் கிராமத்தில் ஏரிக்கரையோரம் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஏரி ஓரமாக வந்த பொதுபாதையை ஒரு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து அடைத்தனர் இதனால் அப்பகுதி மக்கள் எங்கள் பகுதிக்கு பாதை இல்லை எனவும், ஆக்கிரமிப்பை அகற்றி எங்களுக்கு பாதை அமைத்து தர வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சமையல் செய்து போராட்டம்
இதனையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறந்தாங்கி பேராவூரணி சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை கோட்டாட்சியர் அலுவலக வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.
அதன்பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் வாசலிலேயே சமையல் செய்ய தொடங்கினர். இதையடுத்து பொறுப்பு கோட்டாட்சியர் அபினயா சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story