பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது


பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 July 2021 10:56 PM IST (Updated: 20 July 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

திருமயத்தில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமயம், ஜூலை.21-
திருமயத்தில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்க சங்கிலி பறிப்பு
திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியை சேர்ந்த கம்பர்மலைப்பட்டி அய்யனார் (வயது 29), கீழவளவு ராஜவீதியை சேர்ந்த அழகர் (38) என தெரியவந்தது. மேலும் அவர்கள். திருமயம், கல்லல், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தனியாக சென்ற பெண்களை தாக்கி நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
2 பேர் கைது
இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து 8 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும்  பறிமுதல் செய்தனர்.

Next Story