கெலமங்கலம் அருகே கடன் பிரச்சினையில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை


கெலமங்கலம் அருகே கடன் பிரச்சினையில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 July 2021 5:43 PM GMT (Updated: 20 July 2021 5:43 PM GMT)

கெலமங்கலம் அருகே கடன் பிரச்சினையில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 55). இவரது மனைவி கீதா (50). இவர்களது மகன்கள் பரத் (25). யஷ்வந்த் (21). பிரகாஷ்  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் அவரது விவசாய நிலத்தில் பசுமை குடில் அமைத்து குடை மிளகாய், ரோஜா உள்ளிட்டவை பயிரிட்டு ஏற்றுமதி செய்து வந்தார்.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலிலும், விவசாயத்திலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த கடன் பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட பிரகாஷ் நேற்று விவசாய நிலத்தில் உள்ள பசுமை குடிலில் பண்ணையில் தூக்கில் தொங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரகாஷ் வழியிலேயே இறந்த விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இதுகுறித்து .கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story