தடுப்பு சுவரில் பஸ் மோதி விபத்து


தடுப்பு சுவரில் பஸ் மோதி விபத்து
x
தினத்தந்தி 21 July 2021 12:00 AM IST (Updated: 21 July 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் தடுப்பு சுவரில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

அரக்கோணம்

அரக்கோணத்தில் தடுப்பு சுவரில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். 

திருத்தணி, அரக்கோணம் பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றது. திருத்தணியை சேர்ந்த ஓம்பிரகாஷ் (வயது 40) என்பவர் பஸ்சை ஓட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டையில் அரக்கோணம்-காஞ்சீபுரம் சாலையில் பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பஸ் மோதியது.

இந்த விபத்தில் கைனூர் பிரேம்குமார் (41), கங்கைமோட்டூர் மதன் (37), திருத்தணி தனகோட்டி (55), அரக்கோணம் சுவால்பேட்டை கோபி (26), திருத்தணியை அடுத்த பி.ஆர்.பள்ளி தயாளன் (30) ஆகிய 5 பேர் ேலசான காயம் அடைந்தனர். 

இவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்த  ஆணைபாக்கத்தை சேர்ந்த சந்திரசேகர் (37) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story