பாம்பன் கடலில் மிதந்த ஆண் பிணம்


பாம்பன் கடலில் மிதந்த ஆண் பிணம்
x
தினத்தந்தி 21 July 2021 12:04 AM IST (Updated: 21 July 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் கடல் பகுதியில் உடலில் கல் கட்டப்பட்ட நிலையில் மிதந்த ஆண் பிணத்தை கைப்பற்றி கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம், 
பாம்பன் கடல் பகுதியில் உடலில் கல் கட்டப்பட்ட நிலையில் மிதந்த ஆண் பிணத்தை கைப்பற்றி கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல்
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இருந்து இறந்த நிலையில் உடல் ஒன்று தென் கடல் பகுதியை நோக்கி மிதந்து வந்து கொண்டிருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
அதைத் தொடர்ந்து மண்டபம் காவல் நிலைய கடலோரபோலீசார் பாம்பன் பகுதிக்கு வருகை வந்து அங்கிருந்து மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகில் சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த உடலை கடற்கரைக்கு இழுத்து வந்தனர். அப்போது உடலில் கல் வைத்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. 
விசாரணை
அந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கலாம். ஊதா நிறத்தில் பேண்ட் மற்றும் பிரவுன் கலரில் சட்டை அணிந்துள்ளார். அந்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா? பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து விழுந்து கடலில் குதித்து இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story