கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 21 July 2021 12:53 AM IST (Updated: 21 July 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூங்குன்றநாயகி அம்மன் கோவில்

திருப்பத்தூர் அருகே பூங்குன்றன் நாடு என்று அழைக்கப்படும் மகிபாலன்பட்டியில் பிரசித்தி பெற்ற பூங்குன்ற நாயகி அம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டார 24 கிராம மக்களும் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சித்திரை திருவிழா நடைபெறவில்ைல. அரசு அனுமதித்தப்படி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உண்டியல் உடைப்பு

 இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி பொன்னழகு வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கோவிலை திறந்து உள்ளே வந்த போது அங்கு அர்த்த மண்டபத்தில் வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கண்டவராயன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் சேதுராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மர்ம ஆசாமிகள் இரவு கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என தெரியவில்லை.
இது குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story