மாவட்ட செய்திகள்

கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் + "||" + May apply

கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என்று மண்டல இணைப்பதிவாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சிவகங்கை,

சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர்வதற்குரிய விண்ணப்பத்தை அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் மின்னஞ்சல் முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், பங்குத்தொகை ரூ.100 மற்றும் நுழைவு கட்டணம் ரூ.10ஆகியவற்றுடன் சங்கத்திற்கு நேரில் சென்று செலுத்தி உறுப்பினர் ஆகலாம். நேரில் செல்ல முடியாதவர்கள் விண்ணப்பத்தை பதிவு தபாலில் அனைத்து ஆவணங்களையும் இணைத்து பங்கு தொகை, நுழைவு கட்டணத் தொகையை அஞ்சலகம் மூலம் செலுத்திய ரசீது எண், செலுத்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து சங்கத்தின் அனைத்து சேவைகளையும் அரசின் கடன் உதவிகளையும் பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இலவச தேய்ப்பு பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்
சலவை தொழில் செய்பவர்கள் இலவச தேய்ப்பு பெட்டி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
2. மானியத்தில் இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்
வக்பு வாரியத்தில் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கரவாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டகலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
3. வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
4. வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
5. அடையாள அட்டை பெற மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்
அடையாள அட்டை பெற மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்