கோவில் குருக்களை மிரட்டி நகை-செல்போன்கள் பறிப்பு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 20 July 2021 7:30 PM GMT (Updated: 20 July 2021 7:30 PM GMT)

குளித்தலை அருகே கார் கண்ணாடியை உடைத்து கோவில் குருக்களை மிரட்டி நகை, செல்போன்களை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குளித்தலை
கோவில் குருக்கள்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சிவன்மலை பகுதியை சேர்ந்தவர் சோமு குருக்கள் (வயது 60). இவர் சிவன்மலையில் உள்ள கோவிலில் குருக்களாக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரி சித்ரா என்பவர் கோவை கவுண்டம்பாளையம் நுகர்பொருள் வாணிப கழகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
 சித்ரா, குளித்தலையை அடுத்த அய்யர்மலை அருகே உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (ஆடிட்டிங்) கணக்குகளை தணிக்கை செய்யவேண்டும் என்பதால் தன்னை அய்யர்மலைக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்று சோமு குருக்களிடம் கூறியுள்ளார். 
நகை-செல்போன்கள் பறிப்பு
இதனையடுத்து சகோதரி சித்ராவை அய்யர்மலைக்கு சோமு குருக்கள் நேற்று முன்தினம் ஒரு காரில் அழைத்து வந்தார். அங்கு தனது சகோதரியை இறக்கி விட்டு விட்டு சாலையோரம் காரை நிறுத்தி விட்டு பின்புற சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது மாலை சுமார் 3 மணி அளவில் 30 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க இருவர் வந்து கண்ணாடியை கல்லால் உடைத்து கோவில் குருக்களை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம், கைகடிகாரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.     இதுகுறித்து குளித்தலை போலீசில் சோமு குருக்கள் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story