குற்ற வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது


குற்ற வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 1:18 AM IST (Updated: 21 July 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைதாகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட 41 பேரை கைது செய்தனர். இவர்களில் 6 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர்.

Next Story