மாவட்ட செய்திகள்

கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆசிரியை மயங்கி விழுந்து சாவு + "||" + A teacher who went on a motorcycle with her husband fell unconscious and died

கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆசிரியை மயங்கி விழுந்து சாவு

கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆசிரியை மயங்கி விழுந்து சாவு
ஆலங்குளம் அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆசிரியை மயங்கி விழுந்து இறந்தார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் நடு தெருவை சேர்ந்தவர் மணி சங்கர். இவரது மனைவி பத்மாவதி (வயது 52). இவர்கள் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகின்றனர் பத்மாவதி அங்கு உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பத்மாவதி தனது கணவருடன் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மணிசங்கர் பைக்கில் தனது மனைவியுடன் உடையாம்புளிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார். மருதம்புத்தூர் பகுதியில் வந்த போது பத்மாவதி திடீரென்று தலை சுற்றி மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பத்மாவதி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண் மயங்கி விழுந்து சாவு
இளம்பெண் மயங்கி விழுந்து இறந்தார்.