மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல்


மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 21 July 2021 1:49 AM IST (Updated: 21 July 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி மருதுபாண்டியர் நகரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அங்கு விற்பனையாளராக பில்லூரை சேர்ந்த பார்த்திபமூர்த்தி (வயது 43) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு கடைக்கு வந்த 3 வாலிபர்கள் மது பாட்டில்கள் வாங்கும் போது விற்பனையாளருடன் தகராறில் ஈடுபட்டனர்.தகராறு முற்றவே, மது வாங்க வந்த வாலிபர்கள் பார்த்திபமூர்த்தியை பாட்டிலால் தாக்கினர். இதில் அவரது மண்டை உடைத்து ரத்தம் கொட்டியது. அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
காயம் அடைந்த பார்த்திபமூர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து  3 வாலிபர்களை தேடி வருகின்றனர்.


Next Story