சுகாதார துறைக்கு 150 பல்ஸ் ஆக்சி மீட்டர்
தென்காசி மாவட்ட சுகாதார துறைக்கு 150 பல்ஸ் ஆக்சி மீட்டர் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
தென்காசி:
மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட சுகாதார துறைக்கு உதவிடும் வகையில், தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான 150 பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் வழங்கப்பட்டன. தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பல்ஸ் ஆக்சி மீட்டர்களை கலெக்டர் கோபாலசுந்தரராஜிடம் வழங்கினார்.
சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story