அய்யனாபுரத்தில் கிராம மக்கள், அனைத்து கட்சியினர் உண்ணாவிரதம்


அய்யனாபுரத்தில் கிராம மக்கள், அனைத்து கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 21 July 2021 2:19 AM IST (Updated: 21 July 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே கீழ்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அய்யனாபுரத்தில் கிராம மக்கள், அனைத்து கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருக்காட்டுப்பள்ளி;
 ரெயில்வே கீழ்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  அய்யனாபுரத்தில் கிராம மக்கள், அனைத்து கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். 
ரெயில்வே கீழ்பாலம்
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள அய்யனாபுரம் கிராமத்தில் தஞ்சை- திருச்சி ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டை அகற்றி கீழ் பாலம் அமைப்பதை கண்டித்து அய்யனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அனைத்து கட்சியினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அய்யனாபுரம் ரயில் நிலையம்  அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம்முருகேசன் தலைமை தாங்கினார். 
மேம்பாலம்
அய்யனாபுரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டை அகற்றி கீழே பாலம் அமைக்க கூடாது, மேம்பாலம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க.  ஒன்றிய துணை செயலாளர் குணராஜா, தி.மு.க. நிர்வாகிகள் குட்டையா, கூத்தூர்ஜெயராமன், சிவக்குமார், ரெகுநாதன்,
பூதலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான  ரத்தினசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் மாரிய்யா, காமராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கோட்டரப்பட்டி பங்குத்தந்தை அந்தோணிசாமி, நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் சந்துரு, ம.தி.மு.க. பூதலூர் ஒன்றிய செயலாளர் நந்தகுமார், மாதர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, 
மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
பேச்சுவார்த்தை
சம்பவ இடத்தில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன், பூதலூர் வருவாய் ஆய்வாளர் பிரேமாவதி, பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தில் பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது. மாலை 5 மணிக்கு உண்ணாவிரத  போராட்டம் முடிவுற்றது.

Next Story