மாவட்ட செய்திகள்

கால் டாக்சி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Call taxi drivers protest

கால் டாக்சி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

கால் டாக்சி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க கோரி கால் டாக்சி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை

பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு ஏற்றாற்போல் வாடகைகாரர்க ளுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். பெரும் நிறுவனங் களின் கார்கள் தமிழகத்தில் இயங்க தடை விதித்து, தமிழக அரசே கார் நிறுவனங்களை ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை நகர கால் டாக்சி உரிமையாளர் கள் சங்கத்தினர், நேற்று கோவை அவினாசி ரோடு கொடிசியா அருகே தங்களின் கார்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதற்கு கோவை நகர கால் டாக்சி உரிமையாளர்கள் சங்க தலைவர் மொய்தீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட கால்டாக்சி டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து சங்க தலைவர் மொய்தீன் கூறுகையில், கால் டாக்சி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, அவ்வப்போது அதிகரிக்கும் டீசல் கட்டண உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கால் டாக்சி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
கால் டாக்சி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்