திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்


திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்
x
தினத்தந்தி 21 July 2021 3:01 AM IST (Updated: 21 July 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரை சேர்ந்தவர் சலீம்பாஷா. இவரது மகள் ஷகிலாபானு (வயது 21). இவர் வாலிகண்டபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ேமலும் ஷகிலாபானுவிற்கு வருகிற 26-ந் தேதி திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் நிச்சயம் செய்து இருந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷகிலாபானு பின்னர் வீட்டிற்கு வரவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சலீம்பாஷா, வி.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஷகிலாபானுவை தேடி வருகின்றனர்.

Next Story