வாலிபர் மீது தாக்குதல்; ஒருவர் கைது
தா.பழூரில் வாலிபர் தாக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அண்ணங்காரம்பேட்டையை சேர்ந்த மருதகாசியின் மகன் சந்தோஷ்(வயது 34) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வசந்தா என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று காலை சந்தோஷ் அவரது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த வசந்தா, பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது வசந்தாவுக்கும், சந்தோசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் வசந்தாவுக்கு ஆதரவாக அண்ணங்காரம்பேட்டை கிராமத்தில் வசிக்கும் ரவிச்சந்திரன் (52), கடாரம்கொண்டானை சேர்ந்த அண்ணாதுரை மகன் ராஜா (29), அண்ணங்காரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன்கள் சரவணன் (25), கார்த்தி (29), சந்திரசேகரின் மகன்கள் சந்தோஷ் (22), பிரவீன்(20) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி சந்தோசை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சந்தோஷ் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேலும் இது குறித்து சந்தோஷ் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து ராஜாவை(29) கைது செய்தார். மேலும் 5 பேரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story