மாவட்ட செய்திகள்

எசனை, வேப்பந்தட்டை, சிறுவாச்சூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் + "||" + Power outage tomorrow in Esanai, Veppandattai and Siruvachchur areas

எசனை, வேப்பந்தட்டை, சிறுவாச்சூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

எசனை, வேப்பந்தட்டை, சிறுவாச்சூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
பராமரிப்பு பணிகளுக்காக எசனை, வேப்பந்தட்டை, சிறுவாச்சூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பெரம்பலூர்:

மின் நிறுத்தம்
தமிழ்நாடு தொடர் மின் கழக பெரம்பலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, வேப்பந்தட்டை, பாலையூர், அனுக்கூர், சோமண்டாபுதூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவாச்சூர் பகுதியில்...
இதேபோல் பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கிராம பகுதிகளான சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டிமடம், மீன்சுருட்டி, ஓலையூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
ஆண்டிமடம், மீன்சுருட்டி, ஓலையூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
2. ஆண்டிமடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
ஆண்டிமடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
3. மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. அ.மேட்டூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
அ.மேட்டூர், கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
5. அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகளால் நாளை முதல் மின்சாரம் நிறுத்தம்
சிறுவாச்சூர்- புதுக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை முதல் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.