மாவட்ட செய்திகள்

2½ வயது குழந்தை ஏரியில் மூழ்கி பலி + "||" + child drowns in lake

2½ வயது குழந்தை ஏரியில் மூழ்கி பலி

2½ வயது குழந்தை ஏரியில் மூழ்கி பலி
2½ வயது குழந்தை ஏரியில் மூழ்கி பலியானது.
கொண்டாலம்பட்டி:
கொண்டாலம்பட்டி அருகே கோடிக்காடு பூலாவரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதியழகன் மகள் வர்ஷா (வயது 2½). நேற்று மாலை வர்ஷா தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென வர்ஷாவை காணாமல் பெற்றோர் தேடி அலைந்தனர். அங்குள்ள ஏரியில் வர்ஷா பிணமாக மிதந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கொண்டாலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வர்ஷா விளையாடிக் கொண்டே அங்குள்ள ஏரிக்கு சென்றதும், ஏரியில் தண்ணீரில் மூழ்கி பலியானதும் தெரிய வந்தது.