நாளை மறுநாள் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்-கலெக்டர் கார்மேகம் தகவல்


நாளை மறுநாள் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்-கலெக்டர் கார்மேகம் தகவல்
x
தினத்தந்தி 21 July 2021 4:10 AM IST (Updated: 21 July 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் காணொலி காட்சி (கூகுள் மீட்) மூலம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது. விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு சென்று காணொலி காட்சி மூலமாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
இதனால் அவர்கள் அங்கு முன்னதாக சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் வேளாண்மை சம்பந்தமான கோரிக்கைகளை விண்ணப்பம் மூலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரிடம் வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story