மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது + "||" + 40 lakh gold seized at Chennai airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது
உள்ளாடையில் மறைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது.
ஆலந்தூர்,

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்து இறங்கிய சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்தனா். அப்போது விழுப்புரத்தை சோ்ந்த சந்துரு சக்திவேல் (வயது 23) என்பவரை நிறுத்தி விசாரித்தனர்.


அதில், சக்திவேல் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகத்தின் பேரில் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அங்கு எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.40 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 810 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சக்திவேலை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐஸ்-அவுசில் வங்கி முகவரிடம் ரூ.90 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது
சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியில் நூதனமான முறையில் வங்கி முகவரிடம் ரூ.90 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. பெண்ணை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி ரூ.7 லட்சம் வாங்கிய வக்கீல் கைது
திருவள்ளூர் அருகே பெண்ணை நிர்வாண படங்கள் எடுத்து மிரட்டி ரூ.7 லட்சம் வாங்கிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.
3. குரோம்பேட்டையில் அரிசி வியாபாரி கொலையில் 2 பேர் கைது
சென்னையை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (வயது 46). இவர், குரோம்பேட்டை சி.எல்.சி. சாலையில் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை கடையை திறக்க சென்றபோது ஆனந்தராஜை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
4. லாரியில் ரகசிய அறை அமைத்து 328 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
கேரளா சென்ற லாரியில் ரகசிய அறை அமைத்து 328 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. போலீசாரை மிரட்டும் வகையில் ஆடியோ வெளியீடு: உண்மை குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் குரல் கொடுத்து விட்டேன்
போலீசாரை மிரட்டும் வகையில் ஆடியோ வெளியிட்டதாக கைதான பிரபல ரவுடி கோழி அருள், கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதுபோல் குரல் கொடுத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.