திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதி வாலிபர் சாவு
திருவள்ளூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது மினி வேன் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கிளாம்பாக்கம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் விக்னேஷ் (வயது 24). இவர் திருவள்ளூரில் மருந்து கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் விக்னேஷ் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவர் தண்ணீர் குளம் தேவாலயம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே பாக்கத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பாண்டியன் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story