மாவட்ட செய்திகள்

கொட்டப்பட்டுள்ள காலி மதுபாட்டில்கள் + "||" + Emmty wine bolles amass in the field

கொட்டப்பட்டுள்ள காலி மதுபாட்டில்கள்

கொட்டப்பட்டுள்ள காலி மதுபாட்டில்கள்
கொட்டப்பட்டுள்ள காலி மதுபாட்டில்கள்
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் இருந்து வேப்பம்பாளையம் வழியாக வள்ளியரச்சல் செல்லும் ரோட்டில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களின் ஓரம்  சாலையோரத்தில் காலி மது பாட்டில்கள் குவியலாக கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் கால்நடைகள் மேய்ச்சலுக்கு இடையூறாக உள்ளது. இந்த காலி மதுபாட்டில்களினால் கால்நடைகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விவசாய நிலங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் காலில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாய நிலங்கள் மண் வளம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே கால்நடைகள், விவசாய கூலி தொழிலாளர்கள், விவசாய பூமியின் மண் வளத்தை பாதுகாக்க இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.