கயத்தாறு பகுதியில் கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தமுடிவு


கயத்தாறு பகுதியில் கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தமுடிவு
x
தினத்தந்தி 21 July 2021 6:05 PM IST (Updated: 21 July 2021 6:05 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு பகுதியில் கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தமுடிவு செய்யப்பட்டு உள்ளது.

கயத்தாறு:
கயத்தாறு காவல் நிலையத்தில் பஞ்சாயத்து தலைவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, தெற்குமயிலோடை, சவலாப்பேரி, வெள்ளாளன்கோட்டை, திருமங்களக்குறிச்சி, சிவஞானபுரம், வில்லிசேரி, காப்புலிங்கம்பட்டி, அகிலாண்டபுரம், திருமலபுரம், பன்னீர்குளம், உள்பட 62 கிராமங்களில் முக்கிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் இரவு பகல் செயல்படும் வீடியோ கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது மேலும் பஞ்சாயத்து தலைவர்களிடம் தங்கள் பகுதி குறைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தவும் காவல்துறை மூலம் கேட்டுக்கொண்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக் கண்ணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story