கயத்தாறு அருகே கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்
கயத்தாறு அருகே கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது
கயத்தாறு:
கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடியிலுள்ள காளியம்மன் கோவில் கொடை விழா, கடந்த 8 நாட்களுக்குமுன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.. இதனை முன்னிட்டு வில்லிசை, மதியக் கொடை, சாமக்கொடை நடந்தது. மாலையில் மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் எடுத்தல் விமரிசையாக நடந்தது. இந்த முளைப்பாரி ஊர்வலம் பாளையாபுரம் சமுதாய நலக்கூடத்திலிருந்து ஆளுயர முளப்பாரிகளை சமூக இடைவெளியை பின்பற்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சுமந்து சென்றனர். திருவிழாவில் பழைய கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் வகையில் பெண்கள் சிலம்பாட்டம் ஆடினர்.
Related Tags :
Next Story