நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்து தகவல் தெரிவித்த பின்னரே விற்பனைக்கு கொண்டு வரவேண்டும். கலெக்டர் தகவல்
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்து தகவல் தெரிவித்த பின்னரே நெல்மூட்டைகளை கொண்டுவரவேண்டும் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
பதிவு செய்ய வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் கடந்த 15 -ந் தேதி முதல் சித்தஞ்சி, அரும்பாக்கம், கீழ்வீதி, சங்கரன்பாடி, மேல் வீராணம், கரிக்கல், வேடந்தாங்கல், கீழ்வீராணம், ஜோதிபுரம், வெள்ளம்பி, குன்னத்தூர், மேச்சேரி, தோனிமேடு,
சின்ன ஈசலாபுரம், காவேரிப்பாக்கம், பெருமாந்தாங்கல், தாமரைப்பாக்கம், வளையாத்தூர், போலிப்பாக்கம், ரெட்டிவலம், செய்யூர், அணைக்கட்டாபுதூர், மகேந்திரவாடி ஆகிய 23 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. வருகிற 24-ந் தேதிவரை செயல்படும்.
பட்டா, சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுடன் விவசாயிகள் தங்களது பெயரினை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும்.
தகவல் தெரிவித்த பின்னர்
எக்காரணம் கொண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்த நெல்லினை கொட்டி வைக்கக் கூடாது. விவசாயிகள் பதிவுசெய்தபின் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான முறை வரும்பொழுது செல்போன் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். அப்போது நெல்லினை உரிய ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story