மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கி கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Because I did not buy a cell phone 10th grade student Suicide by hanging

செல்போன் வாங்கி கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செல்போன் வாங்கி கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் வாங்கிக்கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்காடு,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சுபைர். இவருடைய மகள் ஆயிஷா தர்ஷினி. இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் தனது பெற்றோரிடம் தனக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுக்கும்படி கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் இப்போது இல்லை. பிறகு வாங்கித்தருவதாக கூறி உள்ளனர். இதனால் அவர் மிகவும் சோர்வுடன் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது தந்தையிடம் செல்போனை கொடுங்கள், சிறிது நேரம் கழித்து தருகிறேன் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் செல்போனை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அவர் தனது படுக்கை அறைக்கு சென்று கதவை சாத்தி உள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் அந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், கதவை பலமுறை தட்டினார்கள். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்தபோது, அங்கு தூக்கில் தொங்கியபடி ஆயிஷா தர்ஷினி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மகளை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆயிஷா தர்ஷினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.