மாவட்ட செய்திகள்

15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் + "||" + 15 tone ration rice seized

15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர்.
வீரபாண்டி
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி
திருப்பூர் முருகம்பாளையம் பாரக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக ரேஷன் அரிசியை சிலர் வாகனங்களில் எடுத்து சென்று பதுக்கி வருவதாக திருப்பூர் குடிமைப்பொருள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கடந்த ஒரு வாரமாக அப்பகுதியை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை முருகம்பாளையம் பாரக்காடு 4ம் வீதியில் திருப்பூர் பறக்கும் படை தனி தாசில்தார் சுந்தரம், தனி வருவாய் ஆய்வாளர் ராஜா ஆகியோர் அதிரடியாக ஒரு வீட்டில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது வீட்டில் 2வது அறையில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன்படிமொத்தம் 250 மூட்டை இருந்தன. இவற்றின் மொத்த எடை 15 டன் ஆகும். இதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசி பதுக்கியவர் யார் என்பது குறித்தும், வீட்டின் உரிமையாளர் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
15 டன் பறிமுதல்
இதையடுத்து 15 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டு,  திருப்பூர் நுகர்பொருள் வணிக கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.  முருகம்பாளையம் பகுதியில் 250 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

-

தொடர்புடைய செய்திகள்

1. 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர்.