விளைநிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்


விளைநிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 21 July 2021 9:51 PM IST (Updated: 21 July 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே விளைநிலங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகிறது.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரக பகுதியில் காட்டுயானை, கடமான், சிறுத்தை, செந்நாய், மலைப்பாம்பு, முயல், உடும்பு உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தேக்கு, தோதகத்தி, சந்தனம் உள்பட பல்வேறு விலை உயர்ந்த மரங்களும் உள்ளன. 

இந்த வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகாடு, பெத்தேல்புரம், பாச்சலூர், சத்திரப்பட்டி, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகிறது. 

அவ்வாறு வரும் யானைகளை விரட்டுவதற்கு வனத்துறை ஊழியர்களுடன் வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறையால் யானைகளை விரட்டுவதில் வனத்துறையினருக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்களை நியமிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story