பேரணாம்பட்டில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது


பேரணாம்பட்டில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 10:01 PM IST (Updated: 21 July 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

வேலூர்

பேரணாம்பட்டு நகரம் சின்னபஜார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்பட உள்ளதாகவும் வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது ஒரு வீட்டில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

 போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 42) என்பவர் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும், அவர் மீது ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. 

இதையடுத்து அங்கு 50 கிலோ வீதம் 21 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் பதுங்கியிருந்த பார்த்திபனை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Next Story