நல்லிணக்கத்துடன் வாழும் அளிஞ்சிகுளம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு


நல்லிணக்கத்துடன் வாழும்  அளிஞ்சிகுளம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு
x
தினத்தந்தி 21 July 2021 4:49 PM GMT (Updated: 21 July 2021 4:49 PM GMT)

அளிஞ்சிகுளம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு

திருப்பத்தூர்

ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமையைக் கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக, குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு அரசின் முலம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் திருப்பத்துர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அளிஞ்சிகுளம் ஊராட்சி தீண்டாமையைக் கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் ஆதிதிராவிடர் வாழும் ஊராட்சி கிராமமாக மாவட்ட கலெக்டரின் கீழ் அமைக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ.10 லட்சம் பரிசு தொகையை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.

ஊராட்சியை தேர்ந்தெடுக்கும் குழுவில் மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர், வருவாய் அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

 இப்பரிசுத்தொகை ரு.10 லட்சத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை தேர்ந்தெடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேஷ்பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story