தஞ்சையில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமுத்து நினைவு நாள் நிகழ்ச்சி


தஞ்சையில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமுத்து நினைவு நாள் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 July 2021 10:29 PM IST (Updated: 21 July 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமுத்து 6-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர், 

அ.தி.மு.க. மாநில விவசாய பிரிவு முன்னாள் செயலாளரும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கு.தங்கமுத்துவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று தஞ்சையில் நடைபெற்றது. இதையொட்டி தஞ்சை ராஜப்பா நகர் 2-ம் தெருவில் உள்ள கு.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் அவரது படத்துக்கு அவருடைய மூத்த மகனும் கு. தங்கமுத்து நினைவு அறக்கட்டளை தலைவருமான டாக்டர். தங்க. கண்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் ஏழை - எளியோருக்கு காலை உணவு வழங்கினார். இதில் தங்க.கண்ணன் பாசறையை சேர்ந்த வக்கீல் முத்தமிழ், ஜியாவுதீன், ஜெயமணி, கார்த்திக், மலேசியா மணி, நாகராஜ், பிரபா, சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தஞ்சை ஆற்றுப்பாலம் காந்திஜி சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கு.தங்கமுத்துவின் படத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கு.ராஜமாணிக்கம், கு.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை தலைவரும், கு.தங்கமுத்துவின் மூத்த மகனுமான டாக்டர்.தங்க.கண்ணன், மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியும், கு.தங்க முத்துவின் இளைய மகனுமான தங்க.இளமுருகு உள்பட பலர் கலந்து கொண்டு கு.தங்கமுத்து படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் டாக்டர்.அருண்குமார், பனவெளி கோவிந்தசாமி, வடக்குப்பட்டு சேகர், தாராசுரம் அசோக்குமார், கோ.வி.மனோகரன், மெலட்டூர் அய்யாபிள்ளை, வக்கீல்.முருகேசன், வீரராஜ், குமார், சம்மந்தம், ராஜா, சிங்காரி, முத்து, மனோகர், நம்ம சந்திரன், அழகர்சாமி, ராஜேந்திரன், கோதண்டம், கனகராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் சூலமங்கலம் நாகராஜ், சண்முகசுந்தரம், துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே நேற்று நடைபெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கு.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை தலைவர் டாக்டர் தங்க கண்ணன் ரூ.5 ஆயிரம் வழங்கினார்.

மேலும் ஒரத்தநாடு அருகே உள்ள கு.தங்கமுத்துவின் சொந்த ஊரான திருநல்லூரில் அவரது படத்துக்கு கிராம மக்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மதியம் திருநல்லூரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கு.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை தலைவர் டாக்டர்.தங்க. கண்ணன் மற்றும் குடும்பத்தினர்கள், டாக்டர் தங்க.கண்ணன் பாசறை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Next Story