வாணியம்பாடியில் செல்போனை பறித்த 2 பேர் கைது


வாணியம்பாடியில்  செல்போனை பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 5:01 PM GMT (Updated: 2021-07-21T22:31:25+05:30)

செல்போனை பறித்த 2 பேர் கைது

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-கச்சேரி ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு வாணியம்பாடியை அடுத்த சிக்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பாட்டியை அழைத்து வந்தார். பாட்டியை வங்கிக்குள் விட்டுவிட்டு அஜய்  செல்போனில் பேசியபடி வங்கி வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 2 பேர் செல்போனை பறித்துகொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். உடனடியாக அஜய் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாணியம்பாடி அடுத்த நடுபட்டறை பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்கிற பச்சி மற்றும் வாணியம்பாடி கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த பிரேம்சுந்தர் (25) ஆகிய 2 பேர் செல்போனை பறித்து தப்பி ஓடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story