உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டை
வாரச்சந்தை
உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பேரூராட்சி சார்பில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக ஆடுகளை வாங்கி செல்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக உளுந்தூர்பேட்டையில் சந்தை நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் சந்தை நடைபெறத் தொடங்கியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தைக்கு உளுந்தூர்பேட்டை மட்டுமின்றி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து விவசாயிகள் அதிகாலையிலேயே தங்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
ரூ.1 கோடிக்கு விற்பனை
நேற்று பக்ரீத்பண்டிகை என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த வியாபாரிகள் மற்றும் முஸ்லிம்கள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதில் குறைந்த பட்சம் ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.21 ஆயிரம் வரைக்கும் விலை போனது. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story