6 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது


6 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 5:45 PM GMT (Updated: 2021-07-21T23:15:20+05:30)

6 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கமுதி, 
கமுதி அடுத்துள்ள பெருமாள்தேவன்பட்டி விலக்கு சாலையில் கருவேலங்காடு பகுதியில் மர்ம நபர்கள் நடமாடி வருவதாக கமுதி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
 அப்போது அந்தபகுதியில் எருமைகுளத்தைச் சேர்ந்த சக்திமுருகன் (வயது40), பொட்டல்புளியை சேர்ந்த மாரிச்செல்வம் (22) ஆகிய 2 பேரை பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 
இதே போல் கோவிலாங்குளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட எருமைகுளம் விலக்கு சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்தவழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில் 3 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. 
இதுதொடர்பாக கரிசல்புளியை சேர்ந்த செல்வி (42), கடுகுசந்தையை சேர்ந்த பாண்டி (38) ஆகியோரை போலீசார் பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story