கடலில் மிதந்து வந்த இலங்கை படகு


கடலில் மிதந்து வந்த இலங்கை படகு
x
தினத்தந்தி 21 July 2021 11:33 PM IST (Updated: 21 July 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

மீமிசல் அருகே கடலில் மிதந்து வந்த இலங்கை படகை கைப்பற்றி கடலோர காவல் குழுமத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டைப்பட்டினம், ஜூலை.22-
மீமிசல் அருகே கடலில் மிதந்து வந்த இலங்கை படகை கைப்பற்றி கடலோர காவல் குழுமத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிதந்து வந்த படகு
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்தில் இருந்து நாட்டுப்படகு மூலம் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் அதே பகுதியை சேர்ந்த பூவரசன் உள்ளிட்ட மீனவர்கள் 4 நாட்டிக்கல் கடல்தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வெள்ளைநிற படகு ஒன்று பாதி நீரில் மூழ்கிய நிலையில் மிதந்து வந்தது. இதனை கண்ட மீனவர்கள் அந்த படகினை கயிறு மூலம் கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இலங்கை படகு
அதன்பேரில் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், மணமேல்குடி கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு சப்-இன்ஸ்பெக்டர் நவீன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து படகை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த படகு இலங்கை நாட்டை சேர்ந்தது என  தெரியவந்தது.
பின்னர் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த படகு குறித்து மேல் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. இலங்கை மீனவர்கள் யாரோனும் கடலில் தவறிவிழுந்து இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் சமூகவிரோதிகள் ஊடுருவீனார்களா? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும்.

Next Story