கடல் குதிரை வைத்திருந்தவர் கைது


கடல் குதிரை வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 6:06 PM GMT (Updated: 2021-07-21T23:36:37+05:30)

கடல் குதிரை வைத்திருந்தவர் கைது

கோட்டைப்பட்டினம், ஜூலை.22-
மணமேல்குடி கடலோர பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் குதிரை மற்றும் கடல் அட்டைகள் பிடிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மீமிசல் அருகே உள்ள பாலகுடி கடலோர கிராமத்தில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லநேந்தல் பகுதியைச் சேர்ந்த  வெள்ளைச்சாமி (வயது 36) ஒரு சாக்கு மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் குதிரை மற்றும் அட்டைகள் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்து கடல் குதிரை, கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருமயம் சிறையில் அடைத்தனர்.

Next Story