மாவட்ட செய்திகள்

சூளகிரி அருகேமர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி + "||" + school student died for fever

சூளகிரி அருகேமர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

சூளகிரி அருகேமர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
சூளகிரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
சூளகிரி:
சூளகிரி அருகே கொட்டாயூர் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவரது மகன் குணசேகரன் (வயது10). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவன் குணசேகரன் வீட்டில் இருந்து வந்தான். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி, கடந்த 18-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தான். மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலியான தகவலின்பேரில், சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா தலைமையில் மருத்துவக்குழுவினர் கொட்டாயூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு கிராம மக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.