சிவனடியார்கள் தர்ணா போராட்டம்


சிவனடியார்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 21 July 2021 6:44 PM GMT (Updated: 2021-07-22T00:14:30+05:30)

சிவனடியார்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

கரூர்
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு தமிழக அரசு வழிபாடு செய்ய அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் கோவிலில் உள்ள பணியாளர் ஒருவர் அம்பாள் சன்னதி, கரியமாலீஸ்வரர் சன்னதி, நாகேஸ்வரர் சன்னதி உள்ளிட்ட கோவில் சன்னதிகளை பூட்டி வைத்துக் கொண்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லையாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு கோவில் முன்பு தரையில் அமர்ந்து சிவனடியார்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story