மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி + "||" + Kills

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே உள்ள கள்ளப்பள்ளியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 36). இவர் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து தனது போட்டோ ஸ்டூடியோவிற்கு தேவையான பொருட்களை மோட்டார் சைக்கிளில் வாங்கி கொண்டு வந்து கொண்டிருந்தார். திம்மாச்சிபுரம் அருகே கே.பேட்டை என்ற இடத்தில் வந்தபோது, சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் மீது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் மற்றும் தியாகராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முதியவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கும், தியாகராஜன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தநிலையில் முதியவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 62 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
2. தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்த காய்கறி வியாபாரி மின்மாற்றியில் விழுந்ததில் உடல் கருகி பலி
கரூரில் தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்த காய்கறி வியாபாரி மின்மாற்றியில் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி இறந்தார்.
3. தபால்துறை வாகனம் மோதி முதியவர் பலி
தபால்துறை வாகனம் மோதி முதியவர் பலி
4. தீயில் கருகி மூதாட்டி சாவு
தீயில் கருகி மூதாட்டி சாவு
5. கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு
கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு