630 பேருக்கு கொரோனா தடுப்பூசி


630 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 21 July 2021 7:42 PM GMT (Updated: 2021-07-22T01:12:21+05:30)

சாத்தூரில் 630 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சாத்தூர், 
சாத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சாத்தூர் நகர வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் சரவணன், டாக்டர் சங்கர நாராயணன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு சாத்தூர் பகுதியில் உள்ள 3,4-வது வார்டு மற்றும் 23,24,வார்டு பகுதியில் 630 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதில் தி.மு.க. நகர செயலாளர் குருசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், பாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story