திருவெள்ளறை பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்


திருவெள்ளறை பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
x
தினத்தந்தி 22 July 2021 1:22 AM IST (Updated: 22 July 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருவெள்ளறை பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.இதையொட்டி யானை மீது வைத்து தங்கக்குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது

சமயபுரம், 
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறையில் இருக்கும் புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாகும். 

மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி துவஜ ஸ்தம்பத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க யானை மீது வைத்து ஒரு தங்க குடம் மற்றும் வெள்ளி குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டது.

அதன் பிறகு தீர்த்த குடங்கள் திருவீதி உலா வந்து மூலஸ்தானம் சென்றது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

Next Story