சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு


சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 21 July 2021 7:59 PM GMT (Updated: 21 July 2021 7:59 PM GMT)

நெல்லையில் நடிகர் சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு, காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை அருகே உள்ள வெம்மணங்குடியில் காமராஜர் சிவாஜி பொது நல இயக்கம் சார்பில் நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. பொது நல இயக்க தலைவர் சிவாஜி முத்துகுமார், சிவாஜி கணேசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் ரோஜா செடிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் கார்த்தீசன், வக்கீல் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story