இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை


இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 22 July 2021 1:30 AM IST (Updated: 22 July 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

விருதுநகர், 
மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். 
சிறப்பு தொழுகை 
விருதுநகரில் ஈகைத்திருநாளான பக்ரீத் பண்டிகையினை நேற்று இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பாக கொண்டாடினர். 
இதையொட்டி இந்நகர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் சார்பில் மின்வாரிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜமாத் தலைவர் அயூப் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 
வாழ்த்து 
இதேபோன்று கல் பள்ளிவாசலில் ஹஸ்ரத் அப்துல் கரீம் பார்கவி தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் சின்ன பள்ளிவாசல் மற்றும் இதர பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர். 
இஸ்லாமிய பெருமக்களுக்கு இதர சமுதாயத்தினர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்தனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

Next Story