கொரோனா தடுப்பூசி முகாம்
சிவகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகிரி நகரப் பஞ்சாயத்தும், வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார மையமும் இணைந்து நடத்திய இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய், நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார ஆய்வாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர்கள் விஷ்ணு குமார், ராஜாராம், சிவகிரி நகரப் பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் நவராஜ், தூய்மை மேற்பார்வையாளர் குமார், குழு மேற்பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவிபட்டணம் மருத்துவ அலுவலர் மோனிகா தலைமையிலான மருத்துவ குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story