65 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்


65 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 21 July 2021 8:41 PM GMT (Updated: 21 July 2021 8:41 PM GMT)

குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 65 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 65 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்துக்கு 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (வியாழக்கிழமை) கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெறும். இதில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள 14 இடங்களில் தடுப்பூசி ஆன்லைன் டோக்கன் பதிவு செய்வதன் மூலமாக அனுமதிக்கப்படும். இதற்கான இடங்கள் விவரம் வருமாறு:-
செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் துறை, குருந்தங்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், குழித்துறை அரசு மருத்துவமனை, நாகர்கோவில் சால்வேஷன் ஆர்மி பள்ளி, இந்துக்கல்லூரி, டதி பெண்கள் பள்ளி, கவிமணி பள்ளி ஆகிய 14 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வெளிநாடு செல்பவர்களுக்கான இரண்டாவது டோஸ் மட்டும் போடப்படுகிறது.
51 இடங்களில்...
நேரடி டோக்கன் முறையில் 51 இடங்களில் இன்று தடுப்பூசி போடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
பூதப்பாண்டி, செண்பகராமன்புதூர், தடிக்காரன் கோணம், அரும நல்லூர், ஆரல்வாய்மொழி, தோவாளை, அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கொட்டாரம், மருங்கூர், ராஜாக்கமங்கலம் துறை, சிங்களேயர்புரி, கணபதிபுரம், குருந்தங்கோடு, சேனம் விளை, வெள்ளிச்சந்தை, நடுவூர்கரை, முட்டம், குளச்சல், கிள்ளியூர், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைக்கடை, குழித்துறை, தூத்தூர், முன்சிறை, தேங்காப்பட்டணம், ஆறுதேசம், கொல்லங்கோடு, இடைக்கோடு, பத்துகாணி, மேல்புறம், களியக்காவிளை, பளுகல், குட்டக்குழி, கண்ணனூர், திருவட்டார், பேச்சிப்பாறை, சுருளோடு, கோதநல்லூர், திருவிதாங்கோடு, பள்ளியாடி, ஓலவிளை, பத்மநாபபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கன்னியாகுமரி, குளச்சல், கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், நாகர்கோவில் தம்மத்து கோணம் அரசு நடுநிலைப் பள்ளியிலும் என மொத்தம் 51 இடங்களில் நேரடி டோக்கன் முறையில் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த 51 மையங்களிலும் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 45 மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரழிவு நோய், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியாக தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

Next Story